கிரிக்கெட் யாப்பை திருத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசேட குழுவில் இருந்து பர்வீஸ் மஹ்ரூப் விலகியுள்ளார்.
யாப்பு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு போதிய அனுபவம் இன்மையால் அது தொடர்பில் அமைச்சருக்கு அறிவித்துவிட்டு பதவி விலகியதாக பர்வீஸ் மஹ்ரூப் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கிரிக்கெட் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியாக தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.