follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP1பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது

Published on

கடல் கடந்த பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கும் துறைமுக நகரத்தில் புதிய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குழுவொன்றை நிறுவுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளம் சட்டத்தரணிகளுக்கு முன்மொழிந்தார்.

புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

றோயல் கல்லூரியில் தான் மாணவனாகக் கழித்த காலத்தையும், தனது பண்பையும் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள கல்லூரியில் இருந்து தாம் பெற்ற பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஒரு அரச மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு தெரியப்படுத்தினார்.

துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத் துறைகளில் தலையீடு பெறுமாறு இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதன்போது, ​​றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரொஹான் சஹபந்து வரவேற்று உரையாற்றியதுடன், அதன் செயலாளராக இருந்து ஓய்வுபெறும் ஹர்ஷன மாதராராச்சி கடந்த வருட அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார்.

றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரொஹான் சஹபந்து மீண்டும் தெரிவுசெய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட லசித கனுவனாராச்சி நன்றியுரையை நிகழ்த்தினார்.

அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம், ரோயல் கல்லூரி முதல்வர் ஆர். எம். ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...