ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு இது குறித்து தெரிவிக்கையில்;
No decision has been taken to suspend the National Fuel Pass QR system from 10th April. NFP data will be analyzed to gradually increase the quotas allocated. Decisions on the system will be taken in consultation with Finance Ministry & other stakeholders in the next few months.
— Kanchana Wijesekera (@kanchana_wij) February 27, 2023
“ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க NFP தரவு பகுப்பாய்வு செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.”
அது அவ்வாறு இருக்க, எதிர்வரும் தமிழ் – சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்போன்றினை விடுத்திருந்தது.
மேலும், தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த 21ம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாளுக்கு நாள் கருத்துக்களை ஏட்டிக்கு போட்டியாக தெரிவித்து வருவதால் தாம் எதை நம்புவது என பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன.
இணைப்புச் செய்திகள்
QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி
எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவித்தல்