முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வழக்கு விசாரணை மே 10 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
2014 ஆம் ஆண்டு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழியர் குழுவை ஈடுபடுத்தி ஊழல் குற்றத்தை செய்தமைக்காக, அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த எராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சதொச நிறுவனம் தமது உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக தனியார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமையால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.