சாய்ந்தமருது கதீப் முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று சனி (25) இரவு மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம பேச்சாளராகவும் விருந்தினராகவும் கலந்து கொண்ட தாருல் ஹுதா பெண்கள் அறபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் (மதனி) அவர்கள் கதீப் முஅத்தின் மார்களின் சிறப்புகள் தற்போதய பொருளாதார நெருக்கடியிலும் அவர்களது சேவை மகத்தானது, அளப்பெரியது, இறைவனுக்காக செய்கின்ற ஒரு சேவை மழை, சூறாவளி இதர அனர்த்தங்கள், நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் அவர்களது பணியில் மாற்றம் இல்லை ஆனால் நமது பள்ளிவாசல் நிருவாகமோ, பொது நிறுவனத்தின் தலைவர்களோ அவர்களது ஊதியம் பற்றி கண்டு கொள்வதில்லை.
ஏன் இந்த நிலைமை வெளிநாடுகளில் இவர்களின் ஊதியங்களோ எண்ணிலடங்காது அல்ஹம்துலிழ்ழாஹ்.
ஆனால் எமது நாட்டில் இவர்களது ஊதியத்தினை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாத நிலமை எனவும் அவரது உரையில் சுட்டிக்காட்டினார்.
இதன் போது பள்ளிவாசல்களில் இரு தசாப்பதங்களை தாண்டி கடமை செய்து முதுமை வயதில் ஓய்வு பெற்றுச் செல்கின்ற மூன்று முஅத்தின்மார்களை கௌரவித்து நினைவுச் சின்னங்களும் பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம் சலீம் (ஷர்க்கி) சிறப்பு விருந்தினராகவும், சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முபாறக் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது முகையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஐ. மன்சூர், ஸீறா பௌண்டேசன் ஸ்தாபக நிருவனரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே. காலித்தின், சாய்ந்தமருது சிங்கர் சோரூமின் உரிமையாளர் எஸ்.எச். ஜிப்ரி, சகல பள்ளிவாசல்களின் தலைவர் செயலாளர் உட்பட சம்மேளத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் முடிவில் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு சம்மேளத்தினால் அவர்களது ஊதியம் பற்றி ஒரு மகஜரும் வழங்கி வைக்கப்பட்டது.