இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது.
இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறவுள்ள 02 டெஸ்ட் போட்டிகள் உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் கீழ் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகளாக ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வழமை போன்று இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு தசுன் ஷானகவும் தலைமை தாங்கியுள்ளார்.
17 வீரர்களும் 12 அதிகாரிகளும் இன்று காலை நியூசிலாந்து நோக்கிச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.