வரிக் கொள்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வரிக் கொள்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள்,பொறியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லுநர்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர். மார்ச் முதலாம் திகதி அனைத்து துறைகளிலும் ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் கூட்டமைப்பும் இணைந்து கொள்கிறது.
ஏனைய தொழிற்சங்கங்களை தொடர் வேலை நிறுத்தத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் தொழில் நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் நேற்று (26) தெரிவித்தார்.