பெங்களூரில் நிறைவடைந்த G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில், இலங்கையின் கடன் தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.
கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் தீர்மானித்துள்ளன.
கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை காண வேண்டியது அவசர தேவை என குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், G-20 நாடுகளின் பிரதிநிதிகள் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் பொதுவான உடன்பாட்டை எட்ட வேண்டிய அவசரத் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.