ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஏற்பாடு செய்துள்ளார்.
1137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதால் அவர்களின் ஆசனங்கள் இரத்துச் செய்யப்படவுள்ள நிலையில், அக்கட்சியின் மற்றுமொரு குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மேயர்களும் இந்தக் குழுவில் உள்ளதால் கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.
விரைவில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து காலியாக உள்ள பதவிகளுக்கு நியமிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.