எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாங்சலி பிரேமதாச தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் செயலாளர் நாயகம் கனிஷ்க லெனரோல் பதிலளித்துள்ளார்.
துலாங்சலி பிரேமதாச எவ்வாறு போலி நாணயத்தை அச்சிட்டு தப்பிச் சென்றார் என்பது தொடர்பில் எவரும் நேர்மையாகப் பேசுவதில்லை என அனுர குமார திஸாநாயக்கவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கனிஷ்க லெனரோல், திருமதி பிரேமதாச 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணத்தில் போலி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸாரின் விசாரணையின் பின்னர் பெரேரா என்ற வர்த்தகர் குற்றவாளி எனவும், துலாங்சலி பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த வர்த்தகர் 20 இலட்சம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இதன்படி, அனுர குமார திஸாநாயக்க நீதிமன்றினை அவமதித்து துலாங்சலி பிரேமதாச மீது பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என்றும் கனிஷ்க லெனரோல் தெரிவித்திருந்தார்.