ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க துருப்பினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.