உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசு சார்ந்தவர்களுக்கு 10% வாக்குகளே கிடைக்கும் என அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளே கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதுவே வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதற்கான காரணம் என நளின் பண்டார தெரிவித்தார்.
கோட்டாபய காலத்துக்கு அப்பால் இரண்டாவது சுனாமி வரவுள்ளதாக தெரிவித்த நளின் பண்டார, பூகம்பம் மற்றும் நாட்டிற்கு சேதம் ஏற்படாமல் இருக்க ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றார்.