அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம்.
இந்நிலை இருந்த போதிலும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களுக்கு போதிய உதவித்தொகை வழங்கப்படாததால் போதுமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை என்பதும் தெரிந்ததே.
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணி நேற்று (22) ஆரம்பமாகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.