ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
இதேவேளை, வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.