புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு மார்ச் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது காலி மற்றும் மாத்தறை மாவட்ட எல்லை நிர்ணய பணிகளை முடித்து வருவதாகவும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாவிட்டால் எல்லை நிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியாக வெளியிடப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் என தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.