அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழில் வல்லுநர்கள் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கிகள், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு – கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக உள்ள ஒரு வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.