எதிர்வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஏஞ்சலோ மெத்தியூஸ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘இங்கிலாந்து லயன்ஸ்’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் தொடக்க வீரர் லசித் க்ருஸ்புள்ளே உட்பட பல இளம் வீரர்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அணி நாளை காலை அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.