கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கான ஒழுங்குமுறை மற்றும் அதற்கான கட்டணங்கள் குறித்த யோசனையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, துறைமுக நகரத்தில் சுமார் 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரத்தின் அடிப்படை நிர்மாணப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எதிர்காலத்தில் மேலும் சில பகுதிகளை மக்களுக்காக திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுக நகர ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடாத்த கோரிய விவாதத்தை வழங்க அரசாங்கம் இணங்கவில்லை.