அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (22) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் நிலையத்திற்கு முன்பாக மதிய வேளை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க,
“இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள். இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
அனைத்து துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“ரணில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 23, 30 மற்றும் பெப்ரவரி 08 ஆகிய நாட்களில் நாம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து இருந்தோம். எரிபொருள், துறைமுகம், மின்சாரம், நீர் என்பது நாட்டின் ஒரு மர்மம். அதனால் தான் பொருளாதாரமே வலுவாகிறது. நாட்டுக்கு டொலர் வரும் ஒரு இடம்.. இன்று வெறும் ஆர்ப்பாட்டம் தான், மார்ச் 01ம் திகதி நாடே முடங்கும் என ரணில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முன்னர் நாம் சட்டப்படி வேலையினை முன்னெடுத்தோம் அதனால் 5 கோடிக்கு மேல் துறைமுகத்திற்கு நட்டம் ஏற்பட்டது. இன்றும் ஒரு மணித்தியாலத்திற்கு 1-2 கோடிகள் நட்டம் ஏற்படலாம். இது எமது விருப்பம் இல்லை நாமும் வாழ வேண்டும். பொலிசாருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் very sorry, இன்று பொலிசாரால் பிரச்சினைகள ஏற்பட்டால் போராட்டம் தொடரும். எம்மிடம் A,B என்று இரண்டு பிளேன்கள் உள்ளளன..” எனத் தெரிவித்திருந்தார்.