ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா அனுமதியளிக்க உள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியா அமுலாக்கியது.
இந்நிலையில், தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை, தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை போன்ற காரணங்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.