நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இன்று முதல் ஜனாதிபதிக்கு உள்ளது.
அரசியலமைப்பின் விதிகளின்படி, பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூட்டப்பட்டு இரண்டரை வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஆகஸ்ட் 20, 2020 அன்று நடைபெற்றது. இதன்படி, இவ்வருடம் பெப்ரவரி 20ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இரண்டரை வருடங்களைத் தாண்டுவதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.
இதேவேளை, நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடிய நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தன.
இதன் காரணமாக நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.