அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ”அறியப்படாத மர்மப் பொருள்” ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
யூஎஸ்எஸ் கனெக்டிகட் என்ற கப்பல் நீருக்கு அடியில் மர்ம பொருள் மீது மோதியதாகவும் இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக அப்பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் உண்டாகி இந்த சூழலில் இது நிகழ்ந்துள்ளது.
யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாம்-ஐ நோக்கிப் பயணித்து வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.