சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஊடாக இலங்கைக்கு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே இலங்கையின் பொருளாதாரத்தின் அடிப்படை அடித்தளத்தை சரியான திசையில் ஆரம்பிக்க முடியும் என்றார்.
பொருளாதாரத்தை மீட்பதற்கு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை மீது நம்பிக்கை வைப்பார்கள் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், இன்னும் பல பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், அதன் பின்னரே பணிகளை கையொப்பமிட முடியும் எனவும் தெரிவித்த அவர், அதன் பின்னர், உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க நிதி ஓட்டம் சேர்க்கப்படும் என்றார்.