உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராக்கல் மனுவை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என அவரது சட்டத்தரணிகள் இன்று (20) உயர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த மனுவை பரிசீலனைக்கு, முன்பு திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த பிரேரணை இன்று அழைக்கப்பட்டது.