தேர்தலுக்கான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள இடையூறுகள் குறித்து எதிர்வரும் சில தினங்களில் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மேலும், அச்சகத்தினால் அச்சுப் பணிகள் தாமதம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் போதிய எரிபொருளை வழங்காமை, அச்சகத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்காமை தொடர்பில் உரிய பிரேரணையில் தெரிவிக்கப்படும் என நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.
முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த பணியை செய்ய முடியவில்லை என்பதை தேர்தல் ஆணைக்குழு விளக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.