சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் இன்றி இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்கலாம் என தெரிவித்துள்ள புளும்பேர்க் சர்வதேச அமைப்பு இலங்கை விடயத்தில் தான் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய கொள்கையை பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விசேட திட்டத்தின் கீழ், கடனுக்கான அனுமதியை வழங்க கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை இந்தியா மற்றும் பாரிஸ் சமூகம் உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் வழங்கியுள்ளனர்.