follow the truth

follow the truth

November, 26, 2024
Homeவணிகம்HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் புத்தம் புதிய தங்கக் கடன் சேவை நிலையம்

HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் புத்தம் புதிய தங்கக் கடன் சேவை நிலையம்

Published on

HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் சேவை
கண்டி மாவட்டத்தில் தங்கக் கடன் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்குனரான HNB FINANCE PLC, நாவலப்பிட்டி அம்பகமுவ வீதி, இல. 32/2 இல் அமைந்துள்ள அதன் நாவலப்பிட்டி கிளையில் புத்தம் புதிய தங்கக் கடன் சேவை நிலையத்தை அண்மையில் நிறுவியது.

நாவலப்பிட்டியில் தற்போது இருக்கும் மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன் சேவை, Gold Plan மற்றும் VIP Gold Loan உள்ளிட்ட நிறுவனத்தின் புத்தாக்கமான தங்கக் கடன் சேவைகளில் இணைவதற்கு புதிய தங்கக் கடன் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது. HNB FINANCE இன் தங்கக் கடன் சேவையின் சிறப்பு அம்சங்கள் தங்கக் கடன் துறையில் போட்டி வட்டி விகிதத்தின் கீழ் சேவைகளை மிக விரைவாக வழங்குவது மற்றும் சலுகைக் கட்டண முறைகள் மூலம் தங்கக் கடனைத் தீர்ப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குகிறது. மேலும், நிறுவனம் எந்த நேரத்திலும் பதிவு கட்டணம் அல்லது மறைமுக கட்டணம் எதுவும் வசூலிக்காது.

“எமது நாவலப்பிட்டி கிளைக்கு புதிய தங்கக் கடன் சேவை மத்திய நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன் சேவைகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியும். எங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமான தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என HNB FINANCE இன் தங்கக் கடன் சேவைகளுக்கான உதவிப் பொது முகாமையாளர்/துறைத் தலைவர் லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்.

“சமூகத்தில் உள்ள நிதிச் சேவைப் போக்குகளை நாங்கள் ஆய்வு செய்துள்ளதால், தடையற்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகள் மற்றும் தங்கக் கடன் வசதிகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பதன் மூலம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் எங்களது புத்தாக்கமான சேவைகளை மூலோபாய ரீதியாக அறிமுகப்படுத்தி மேம்படுத்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலர் தங்கத்தை வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், HNB FINANCE இன் “Gold Plan தங்கக் கடன் திட்டம்” என்பது, மக்கள் தவணை முறையில் பணம் செலுத்தி அவர்கள் விரும்பும் தங்க நகைகளை வாங்கும் வாய்ப்பை வழங்குவது சிறந்த விடயமாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள தங்க கையிருப்பை அதிகரிக்கவும், குழந்தைகளின் திருமணம் போன்ற பண்டிகைத் தேவைகளுக்காக நகைகளை வாங்கவும் இலகுவாக உள்ளது. “Gold Plan” எதிர்காலத்தில் கடனை அடைத்த பிறகு அவர்களின் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகவும் இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE இன் “VIP Gold Loan” திட்டமானது, தங்களுடைய தங்க ஆபரணங்களுக்கு மேலதிகமாக பணக் கடன்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த அளவிலான தனிப்பட்ட பாதுகாப்பைக் கொண்ட எந்தவொரு வணிகத்திற்கும் அல்லது தனி நபருக்கும் அதிகபட்ச மதிப்பைக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்காக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதிச் சேவைகள் வழங்கப்படும் மற்றும் அவர்களின் வசதிக்கேற்ப செயல்முறையைச் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, HNB FINANCE அவர்களுக்கு மிகவும் பொருத்தமான சேவைகள் உட்பட முழு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கும்.

அன்றாட நடவடிக்கைகளுக்கு விரைவான மற்றும் எளிமையான பணப்புழக்கம் இன்றியமையாதது என்பதால், அதிக வட்டி விகிதங்கள் அல்லது வேறு எந்த வழிகளிலும் கடனைப் பெறுவதற்கு கடனைப் பெற விரும்பும் பல வணிகங்கள் பணத்தை விரைவாகப் பெறுவதை உறுதி செய்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வணிகமும், தங்களுடைய தங்கத்திற்கான கடனைப் பெற விரும்பும் எந்தவொரு தனிநபரும் HNB FINANCE தங்கக் கடன் சேவை மூலம் தங்களின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர் ஷொப்பிங் அனுபவத்திற்கான பிரத்தியேக காட்சியறையை திறந்துள்ளது Fashion Bug

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இயங்கி வந்த அதன் பிரத்தியேகமான...

அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு...

இலங்கையின் வங்கித் துறையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கியின் பல சாதனைகள்

இலங்கையின் வங்கித் துறையில் அதன் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கி பல...