மின்வெட்டு மேற்கொள்ள மின் ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்ல நேரிட்டால் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குங்கள் என இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இந்த மின்வெட்டு மற்றும் கட்டண உயர்வு தொடர்பில் மின்சார சபை ஊழியர்கள் சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களால் வேலைக்குச் சென்று அடிபட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மின்கட்டண உயர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இதற்கு மக்கள் ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.
மின்வெட்டுக்கு செல்லும் தொழிலாளர்களை குடியிருப்பு வாசிகளால் அடிக்க நேரிட்டால், தொழிற்சங்கமாக தலையிட மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு அதிக கட்டண நிர்ணயம் செய்யப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.