இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பஸ்நாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16) காலை காலமானார்.
பந்துல பஸ்நாயக்க சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான இவர் இறக்கும் போது அவருக்கு வயது 76.
1980களில் அரசியலில் பிரவேசித்த பந்துல பஸ்நாயக்க 1994-2000 வரை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றினார்.
2004-2010 க்கு இடையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) பாராளுமன்ற உறுப்பினர் சுற்றாடல் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார், அதே நேரத்தில் அவர் விளையாட்டு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் பணியாற்றினார்.
முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்கவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி கல்கமுவவில் இடம்பெறவுள்ளது.