அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஊழல்வாதிகளை வீதிக்கு விரட்டும் போராட்டத்தை அவர்களது கட்சிகள் கொண்டு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ரை கெளி பல்தாசர் (Vraie Cally Balthazaar) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தனர்.
மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் பல்தாசர், பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் வரை தமது கட்சி எதிர்பார்க்கும் போராட்டம் தொடரும் என்றார். பொதுத் தேர்தலின் மூலம் ஊழல்வாதிகளை உண்மையாகவே விரட்டியடிக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர், வீதிகளில் இறங்கி போராடுவதுடன், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றம் செல்லவும் தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை முழுவதும் ஊழல்வாதிகளை விரட்டும் போராட்டம் தொடங்கும். தேர்தலுக்கு இடையூறு செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அது நாளை (17) விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.