இன்று(11) அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.