இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் எனவும் எந்தவித அபராதமும் அறவிடப்படமாட்டதெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.