பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.