இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, MegaPay (Pvt) Ltd உடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) அணுகக்கூடிய மற்றும் மலிவு அட்டை கொடுப்பனவு ஏற்புத் தீர்வை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கையில் முன்னணி டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வு வழங்குனரான Pay&Go உடன் இணைந்துள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம், SME தொழில்முனைவோர், Pay&Go Android POS Terminals மூலம் நேரடியான, கொடுப்பனவு இயந்திரங்கள் மற்றும் QR பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி விரிவுபடுத்துவதற்கு முன்கூட்டியே POS அமைப்புடன் வசதியளிக்கப்படும். இந்த நிகழ்வின் போது HNB கார்ட் பிரிவின் பிரதானி கௌதமி நிரஞ்சன் மற்றும் MegaPay (Pvt) Ltdஇன் பொதுப் பணிப்பாளர் வர்தன் அஸ்லிபெக்யான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“SMEக்கள் இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாக இருக்கின்றன, மொத்த வேலைவாய்ப்பில் 45% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரைவாசிக்கும் அதிகமாகும். முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில், தற்போதைய டிஜிட்டல் உலகில் போட்டிடுவதற்கு தங்களை மாற்றிக் கொள்வதற்காக விலைமதிப்பற்ற நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்குவது உறுதியான காரணிகளில் ஒன்றாக உள்ளது. Pay&Go உடனான எமது கூட்டாண்மையானது, இலங்கையின் SMEகளை தொழில்நுட்ப ரீதியாக வலுவூட்டுவதற்கான இந்த முக்கிய முயற்சியில் மற்றொரு முக்கிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது,” என HNB கார்ட் பிரிவின் பிரதானி கௌதமி நிரஞ்சன் தெரிவித்தார்.
இந்த கூட்டாண்மை மூலம், HNB SME தொழில்முனைவோர், கட்டண அறவீடுகள், Peer-to-Peer பரிவர்த்தனைகள் மற்றும் QR குறியீடு கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிறுவன தர முற்பணத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். புதிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முன்னோடியில்லாத அணுகலை SME களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுடன் குறைந்த கட்டணத்தை ஏற்றுக்கொள்வதையும் இது செயல்படுத்துகிறது, வலுவான e-commerce திறன்களை மேம்படுத்துகிறது.
HNB SMEகள் மொபைல், பயன்பாடுகள், இணையம், காப்புறுதி, தொலைக்காட்சி, வங்கிகள், Wallets, Online சேவைகள் போன்ற பிற சேவைகளுக்கான அணுகலைப் பெறலாம் மற்றும் நன்கொடைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தங்கள் அன்றாட நடவடிக்கைகளின் போது பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு SME-யின் திறனையும் தீவிரமாக மேம்படுத்துகிறது.
“தற்போது, HNB இலங்கையில் தொழில்முனைவோர்களின் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த கூட்டாண்மையானது அனைத்து வணிக நோக்கங்களுக்கும் தடையற்ற கட்டண தீர்வுகளுடன் நாட்டை மேம்படுத்துவதில் எங்கள் சேவைகளின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேலும் அணுகக்கூடியதாகவும் சிறந்ததாகவும் மாற்றுவதற்கு அவர்களின் மேம்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு HNB உடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என்று MegaPay (Pvt) Ltd இன் பொதுப் பணிப்பாளர் வர்தன் அஸ்லிபெக்யான் தெரிவித்தார்.
MegaPay (Pvt) Ltd, “Pay&Go” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் இயங்குகிறது, இது இலங்கையின் புத்தாக்கமான கட்டணச் செயலாக்கம் மற்றும் கட்டண சேகரிப்புக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். கட்டணக் கொடுப்பனவுகள், P2P இடமாற்றங்கள், QR கொடுப்பனவுகள் போன்ற நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான விரைவான, எளிதான மற்றும் நம்பகமான அமைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள்.
256 வாடிக்கையாளர் நிலையங்களுடன், HNB இலங்கையின் மிகப் பெரிய, தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். பேண்தகைமை, நல்லாட்சி மற்றும் கூட்டுத்தாபனத்தின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் அதன் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் சிறந்த கார்ப்பரேட் பிரஜைகள் விருது வழங்கும் நிகழ்வில் HNB 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கூட்டாண்மை குடிமகனாக முடிசூட்டப்பட்டது.
சிறந்த 10 கார்ப்பரேட் குடிமக்களுக்கான பட்டியலில் இடம்பிடித்தது மற்றும் நிதித் துறையாளர் ஆளுமைப் பிரிவு மற்றும் நிலைத்தன்மை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது உட்பட 4 கூடுதல் பாராட்டுகளை வங்கி மேலும் பெற்றுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற வங்கியாளர் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட உலகின் தலைசிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் HNB இடம்பிடித்துள்ளது, மேலும், ஏசியன் பேங்கர் இதழால் நடத்தப்பட்ட வாடிக்கையாளர் நிதிச் சேவைகள் 2022 விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வணிக வங்கியாக கௌரவமான சர்வதேச சிறப்புடன் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.