follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1கிரிப்டோகரன்சிக்கு அனுமதி அளித்தது இலங்கை

கிரிப்டோகரன்சிக்கு அனுமதி அளித்தது இலங்கை

Published on

கிரிப்டோகரன்சி மயினிங் நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமான வர்த்தக சூழலை ஏற்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காக டிஜிட்டல் வங்கி முறைமை, ப்ளொக்செயின் தொழிநுட்பம் (டீடழஉமஉhயin வநஉhழெடழபல), கிரிப்டோகரன்சி மயினிங் (ஊசலிவழஉரசசநnஉல ஆiniபெ) மற்றும் தேவையான இதர சேவைகளை வழங்குதல் போன்ற துறைகள் உள்ளிட்ட கூட்டிணைந்த தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கான தேவை அமைச்சரால் முன்மொழியப்பட்டது.

தெற்காசியவில் அதிகமான நாடுகள் குறித்த துறைகளை மதிப்பிடல் மற்றும் அபிவிருத்தி செய்வதை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த நாடுகளுடன் போட்டித்தன்மையில் செயற்படுவதற்கு இயலுமான வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துரித கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த துறைகளில் செயற்படும் கம்பனிகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அவசியமான விடயங்களை அறிக்கைப்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவமான தொழில்வாண்மையாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டும் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கமைய, க்ரிப்ரோகரன்சி மயினிங் கம்பனிகளுக்கு இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப்...

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும்...

“கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் எடுக்கும்”

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று...