follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுபெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை புறக்கணித்தனர்

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை புறக்கணித்தனர்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இந்த உரையை புறக்கணித்தன.

மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவில்லை.

துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகன பேரணிகள் இன்றி சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சம்பிரதாயபூர்வமாக அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அரசாங்க கொள்கை அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நான்காவது அமர்வின் சம்பிரதாய திறப்பு விழாவை சம்பிரதாயமான வைபவமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகனப் பேரணிகள் நடைபெறவில்லை.

கோட்டே ஜனாதிபதி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை ஆசீர்வதித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...