ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இருந்து பிஞ்ச் விலக நடவடிக்கை எடுத்திருந்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் வரை தன்னால் விளையாட முடியாது என்பதால், அணிக்கான திட்டங்களை வகுப்பதற்காக வெளியேற இதுவே சரியான தருணம் என ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச், 34.28 ஓட்டங்களில் சராசரியை தக்க வைத்துக் கொண்டார்.
ஆரோன் ஃபிஞ்ச் 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.