தற்போது அத்தியாவசிய செலவுகளுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எதற்கும் பணம் செலவழிக்கும் திறன் தற்போது திறைசேரிக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, தேர்தல் அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் செலவிடப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி மற்றும் பிற மானியங்களையும் தாமதப்படுத்த வேண்டியிருக்கும்.
மேலும், நாட்டின் வருமானத்தை விட இரண்டு மடங்கு செலவை திறைசேரி ஏற்க வேண்டும் எனத் கூறியுள்ளார்.