ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி ஹினிதும பிரதேசத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அவர் கலந்து கொண்டார்.
சஜித் பிரேமதாச இந்த நாட்டில் பட்டினியை நீக்கும் செயற்பாட்டிற்கு உழைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்காக அவருடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.