சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை (06) பிற்பகல் 03 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25ம் திகதி முதல் முறையாக கூடிய அரசியலமைப்பு சபை, ஜனவரி 30ம் திகதி மீண்டும் கூடியது.
ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அதற்கான விண்ணப்பங்களை வரவேற்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி பெப்ரவரி 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஆணைக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் உள்ளது.
ஏற்கனவே வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு சபையின் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.