ஜப்பான் அரசாங்கம் இலங்கை பொலிஸாருக்கு பல வாகனங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடை வழங்கியுள்ளது.
150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் உபகரணங்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவினால் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரினால் இவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.