ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 08ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்