தேசிய நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துவதில் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டேக்கி ஷுன்சுகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டகேசுன்சுகே, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு 100 மில்லியன் ஜப்பான் யென்னை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடனான சந்திப்பின்போது ஜப்பானிய அமைச்சர் இதனை தெரிவித்;துள்ளார்.
அரசாங்கம் வடக்கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் 95வீதமானவர்களை அவர்களிற்குரிய நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக அயராது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.