நூறாவது சுதந்திர தினத்திற்குள் உயர் பொருளாதார வளம் கொண்ட உலக மூலதனத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையை உருவாக்க இன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அச்சமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதற்காக மக்களின் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
75வது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த சந்தர்ப்பம் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் சவாலான நேரம்.
கடந்த 75 ஆண்டுகளில், நாம் பெற்றதை விட இழந்தவை அதிகம். உலகப் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பெரிய பங்கைப் பெறுவதற்குத் தேவையான உத்திகளைத் திட்டமிடுவதே இந்த ஆண்டு எங்களின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.