ஹொங்கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
ஹொங்கொங்குக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது எனவும் ஹொங் ஹொங்குக்கு வருபவர்களுக்கு 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவுள்ளதாகவும் ஹொங்கொங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் லீ அறிவித்தார்.
இந்த இலவச விமானப் பயணச்சீட்டுத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஹொங் கொங் விமான சேவை நிறுவனங்கள் கெதே பசிபிக், எச்கே எக்ஸ்பிரஸ், ஹொங் கொங் எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு ஊடாக இந்த டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்காக மேலும் 80,000 இலவச விமானப் பயண டிக்கெட்டுகளும் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.