follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுயானையும் மொட்டும் ஒன்று சேர்ந்து வரி சுமத்தி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

யானையும் மொட்டும் ஒன்று சேர்ந்து வரி சுமத்தி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்

Published on

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியுடன் இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைப்பதாகவும், தவிசாளர்களுக்கு, பிரதி தவிசாளர்களுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒப்பந்தம் செய்தல், மக்கள் வளத்தைப்பயன்படுத்தி பிரதிநிதிகள் வளமடைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ராஜபக்சர்கள் உருவாக்கிய மோசடி மற்றும் ஊழல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக இல்லாதொழிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று இனவாதம், இன பேதம், மதவாதம் மத பேதம் என்பன தோற்றுப்போயுள்ளதாகவும், இனவாதத்தையும், மதவாத்தையும் விதைத்து நாட்டை அழித்த ராஜபக்சர்களின் மொட்டின் கதையும் முடிந்துவிட்டது என்றாலும், தற்போது யானையும் மொட்டும் ஒன்று சேர்ந்து மக்களின் மீது வரியை சுமத்தி மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை மொட்டு சதி நடந்தது போல், தற்போதுமக்களை படுபாதாளத்தில் போட யானை மொட்டு சதியொன்று இடம் பெற்று வருவதாகவும், இந்த சதியை முறியடிக்கும் பொறுப்பு மக்களுடையது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அரசாங்கம் முதுகெழும்புடன் சரியான நிலைப்பாட்டிலிருந்து சர்வதேச அமைப்புகளை கையாள்வதுடன் நாட்டு நலனுக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு அழுத்தங்களைபிரயோகிக்கக் கூடாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தாலும், அந்த ஒப்பந்தம் மக்களின் வாழ்வை அழிக்காது, மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் விதமாகவே மேற்கொள்ளும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும்தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் பயணிக்க தடை

யாழ்ப்பாணம் - சங்குப்பிட்டி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரத் திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 3 நாட்களுக்கு குறித்த பாலத்தினூடாக...

தேயிலை ஏற்றுமதி மூலம் 942.3 மில்லியன் டொலர் வருமானம்

2024 ஆண்டின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. வருடத்தின் முதல் 8 மாதங்களில்...

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...