எதிர்வரும் பெப்ரவரி 2023,ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரனையாளராக தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS Holding இலங்கை கிரிக்கெட் உடன் மீண்டும் கூட்டிணைந்துள்ளது.
MAS முதன்முதலில் மகளிர் கிரிக்கெட் அணிக்காக 2007-2008 இல் துநசளநல களைத் தயாரிக்கத் தொடங்கியது மற்றும் 2012 முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணிக்கு உத்தியோகபூர்வ Jersey அனுசரனையாளர் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக இலங்கையில் மகளிர் கிரிக்கெட் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு MAS தொடர்ந்து அனுசரனை வழங்கி வருகிறது.
மேலும் 2008 மற்றும் 2010க்கு இடையில் மகளிர் கிரிக்கெட் அணிக்கான அணி அனுசரணையாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.