75வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்ட் அவர்களும் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.