follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணி

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணி

Published on

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (01) இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் 53 இராணுவ அதிகாரிகள், 17 கடற்படை அதிகாரிகள் மற்றும் 07 விமானப்படை அதிகாரிகளுக்கு இங்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. 20 முப்படை வீரர்களுக்கு 75 ஆவது சுதந்திர தின நினைவுப் பதக்கங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நாட்டின் பாதுகாப்புக்காக நமது பாதுகாப்புப் படையினர் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். நமது இராணுவம் உலகப் போரின் போதே ஆரம்பிக்கப்பட்டது. அது உலகில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தது. இரண்டாவது யுத்தம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகவே நடைபெற்றது. அதற்காக நமது இராணுவம் உயிர் தியாகத்துடன் செயற்பட்டது.

இன்று நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவிட்டால், இந்த கடன் பொறியில் இருந்து விடுபடாவிட்டால், எமது நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போய்விடும். நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. இன்று உலகின் பொருளாதார சக்திகளிடம் நாம் சரணடைய முடியாது. எனவே இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று அவர்களின் இழந்த வருமான வழிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். சில அரச ஊழியர்கள் கடன் வாங்கி வரியும் செலுத்தும் நிலையில் வருமானம் இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். இந்த அழுத்தத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டியுள்ளது. இந்த அழுத்தத்தை நம்மால் நீக்க முடியும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத்...

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து அறிவித்தல்

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு...