சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
நாட்டிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, தமது சேவை பெறுநர் வெளிநாடு செல்வதாக அமைச்சர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
அமைச்சரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படாத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையில் வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.